சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளுக்கு ரூ. 120 கோடி ஒதுக்கீடு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளுக்கு ரூ. 120 கோடி ஒதுக்கீடு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2018 4:30 AM IST (Updated: 27 Oct 2018 12:18 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளுக்கு ரூ. 120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

திருவாரூர்-காரைக்குடி வரையிலான அகல ரெயில் பாதை பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூரில் இருந்து திருத் துறைப்பூண்டி வரை முடிவடைந்த நிலையில் காரைக்குடியில் இருந்து பட்டுக்கோட்டை வரையிலும் முடிவடைந்து உள்ளது. இப்போது திருத் துறைப்பூண்டியில் இருந்து முத்துப்பேட்டை வரையிலான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முடிவடைந்து ஒரு சில மாதங்களில் ரெயில் இயக்கப்படும் என இந்த நிலையில் திருத்துறைப்பூண்டிக்கு வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ரெயில்வே பணிகளை சென்று பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ரெயில் பாதை சம்பந்தமாக ரெயில்வே மந்திரியிடம் பேசி நிதி ஒதுக்க சொல்லி பணிகளை விரைந்து முடிக்க சொல்லி கூறினேன். அதன்படி பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் முடிவடைந்த உடனே ரெயில்வே மேம்பால பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் தொடர்பாக கேட்டதற்கு இந்த தீர்ப்பை முன்பே எதிர்ப்பார்த்தோம். தீர்ப்பு காலதாமதமாக வந்துள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளுக்காக ரூ.120 கோடி ஒதுக்கி உள்ளதாகவும், அந்த பணி விரைவில் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது பா.ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், முன்னாள் மாவட்ட செயலாளர் இளசுமணி, மாவட்ட பொருளாளர் சிவக்குமார், நகர தலைவர் வினோத், முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கணேஷ், கோட்ட பொருப்பாளர் வரதராஜன், கோட்ட இணை பொருப்பாளர் கண்ணன், நகர துணை செயலாளர் ஜயப்பன், நகர பொதுச்செயலாளர் பன்னீர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story