திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டம்


திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டம்
x
தினத்தந்தி 27 Oct 2018 3:00 AM IST (Updated: 27 Oct 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூரில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

நிர்வாகிகள் கூட்டம்

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நிர்வாகிகள் கூட்டம் திருச்செந்தூரில் நேற்று நடந்தது. நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் தலைமை தாங்கினார்.

மாநில துணை தலைவர் சாம் மனோகர், மாநில துணை செயலாளர் பால முனியப்பன், நிர்வாகக்குழு உறுப்பினர் காயல் இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ஆதவன் ஆதித்தன்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் பேரனும், தினத்தந்தி இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தனின் மகனுமான பா.ஆதவன் ஆதித்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நற்பணி மன்றத்தின் வளர்ச்சி, செயல்பாடுகள் குறித்தும், நற்பணி மன்றத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அமிர்தராஜ், நற்பணி மன்ற தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் தவமணி, நெல்லை மாவட்ட தலைவர் எஸ்.எஸ்.எஸ்.நாதன், துணை தலைவர் வள்ளியூர் தர்மர், செயலாளர் தோப்புமணி, நெல்லை மாநகர தலைவர் பாக்கியராஜ், பாளையங்கோட்டை தலைவர் வக்கீல் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் செல்லத்துரை,

ஒன்றிய செயலாளர்கள் அருணாசலம், குருசாமி, பாவூர்சத்திரம் நகர தலைவர் லோட்டஸ் முருகன், வேலாயுதபுரம் தலைவர் முருகன், நிர்வாகிகள் உத்திரகுமார், அம்பி கண்ணன், சபேஷ் ஆதித்தன், முருகன் ஆதித்தன், கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் பரத்சிங், கலைச்செல்வன், எழிலரசு, ஸ்டீபன், பத்மேந்திரா உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story