குளச்சல் அருகே குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்


குளச்சல் அருகே குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:00 AM IST (Updated: 27 Oct 2018 12:47 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே குளக்கரையில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டன.

குளச்சல் அருகே வெள்ளியாகுளம் உள்ளது. இந்த குளக்கரையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிலர் குடிசை அமைத்து வசித்து வந்தனர். இதனையடுத்து பொதுப்பணித்துறையினர் குளக்கரையில் இருந்த ஆக்கிரமிப்பை அகற்றினர்.

ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு முன்பு குடிசை அமைத்தவர்களில் தகுதியானவர்களுக்கு வருவாய்த்துறை சார்பில் லியோன்நகரில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. இதனால் குளக்கரையில் குடிசை அமைத்தவர்கள் லியோன் நகருக்கு குடியிருப்பை மாற்றினர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சிலர் இந்த குளக்கரையில் குடிசை வீடுகள்,ஓட்டு வீடு கள் கட்டி வசிக்க தொடங்கினர்.

இதனை அறிந்த பொதுப்பணித்துறையினர் அங்கிருந்து காலி செய்யுமாறு நோட்டீஸ் அளித்தனர். ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை. இதனையடுத்து நேற்று தக்கலை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கதிரவன் தலைமையிலான ஊழியர்கள் வெள்ளியாக்குளக்கரைக்கு வந்தனர்.

அங்கு ஆக்கிரமிப்பு வீடுகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதற்கான பாதுகாப்பு பணியில் குளச்சல் சப் -இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் தலைமையிலான போலீசார் ஈடுபட்டனர்.


Next Story