உளுந்தூர்பேட்டை அருகே: ஏரியில் மாற்றுத்திறனாளி மாணவன் பிணம் -போலீசார் விசாரணை


உளுந்தூர்பேட்டை அருகே: ஏரியில் மாற்றுத்திறனாளி மாணவன் பிணம் -போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 27 Oct 2018 3:30 AM IST (Updated: 27 Oct 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டை அருகே ஏரியில் மாற்றுத்திறனாளி மாணவன் பிணமாக கிடந்தான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம், 

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவருடைய மகன் விமல்ராஜ்(வயது 15). மாற்றுத்திறனாளி. இவன் கனத்தூர் கிராமத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து அதே பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் விமல்ராஜ் அருகில் விளையாட சென்றான். பின்னர் இரவு நீண்டநேரமாகியும் அவன் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவனை பல்வேறு இடங்கில் தேடி பார்த்தனர். இருப்பினும் அவன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலையில் உடையானந்தல் ஏரியில் விமல்ராஜ் பிணமாக கிடந்தான். இதுபற்றி அறிந்த அவனது உறவினர்கள் அங்கு சென்று விமல்ராஜின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இதற்கிடையே இதுகுறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விமல்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏரி வழியாக சென்றபோது அங்கு தவறி விழுந்து விமல்ராஜ் இறந்தானா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story