பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி: வாலிபருக்கு ஓராண்டு சிறை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு

பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சி: வாலிபருக்கு ஓராண்டு சிறை தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Oct 2018 2:45 AM IST (Updated: 27 Oct 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டு உள்ளது.

மானபங்க முயற்சி

தூத்துக்குடி அருகே உள்ள தெய்வச்செயல்புரம் எல்லைநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சூரியகலா (வயது 40). இவர் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அவரை அதே பகுதியை சேர்ந்த மூக்கையா மகன் சிவலிங்கபெருமாள் (26) என்பவர், மானபங்க படுத்த முயன்று உள்ளார். அவரிடம் இருந்து தப்பிய சூரியகலா கொடுத்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் சிவலிங்கபெருமாள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ஓராண்டு சிறை

இந்த வழக்கு தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், பெண்ணை மானபங்க படுத்த முயன்ற சிவலிங்கபெருமாளுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதமும், பணத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு மாத சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

Next Story