பழனியில் பரபரப்பை ஏற்படுத்திய ரெயில்வே ஊழியர் கொலைக்கு ஓரின சேர்க்கை காரணமா? - போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை


பழனியில் பரபரப்பை ஏற்படுத்திய ரெயில்வே ஊழியர் கொலைக்கு ஓரின சேர்க்கை காரணமா? - போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை
x
தினத்தந்தி 27 Oct 2018 3:15 AM IST (Updated: 27 Oct 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் பரபரப்பை ஏற்படுத்திய ரெயில்வே ஊழியர் கொலை சம்பவத்துக்கு ஓரின சேர்க்கை காரணமா? என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

பழனி, 

பழனி புதுநகரில் சங்கிலிகேட் என அழைக்கப்படும் ரெயில்வே கேட்டில் ஊழியராக (கேபின் மேன்) வேலை பார்த்தவர் முருகேசன் (வயது 59). இவருக்கு திருமணம் ஆகவில்லை. ரெயில்வே கேட் அருகே உள்ள குடியிருப்பில், ஒரு வீட்டில் வசித்து வந்த முருகேசன் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்குள் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

தகவலறிந்து பழனி நகர் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, அவருடைய தலையில் யாரோ அம்மிக்கல்லை போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது. பின்னர் திண்டுக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து மோப்பநாயும் அங்கு கொண்டுவரப்பட்டது. அது வீட்டுக்குள் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், நேரில் வந்து விசாரணை நடத்தினார். அப்போது, கொலை செய்யப்பட்ட முருகேசனுக்கு ஓரின சேர்க்கை பழக்கம் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும் அவர், தன்னுடன் அடிக்கடி வாலிபர்களை வீட்டுக்கு அழைத்துச்சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டுக்கு வந்த மர்ம நபருடன் ஓரின சேர்க்கையில் முருகேசன் ஈடுபட முயன்றிருக்கலாம்.

அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அந்த நபர், முருகேசனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த காரணத்தினால் தான் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்றும், வீட்டுக்கு வந்து சென்ற மர்ம நபர் யார்? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story