நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் சாலை மறியல் ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம்


நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் சாலை மறியல் ராகுல் காந்தி கைதுக்கு கண்டனம்
x
தினத்தந்தி 27 Oct 2018 3:00 AM IST (Updated: 27 Oct 2018 1:37 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார்.

நெல்லை, 

டெல்லியில் சி.பி.ஐ. அலுவலகத்தில் நேற்று போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து நெல்லையில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு வசந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் திரண்டு நின்று சாலை மறியலில் ஈடுபட்டனர். நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தால் வண்ணார்பேட்டை –நெல்லை சந்திப்பு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த பாளையங்கோட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து, காங்கிரஸ் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு, கட்சி அலுவலகம் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் ராஜேஷ்குமார், வக்கீல் காமராஜ், மண்டல தலைவர்கள் தனசிங் பாண்டியன், அய்யப்பன், மாரியப்பன், பொதுச் செயலாளர்கள் சொக்கலிங்ககுமார், ‌ஷபீக், ஷேக் நாகூர் கனி, ராஜாசரவணன், வக்கீல் காமராஜ், தருவை காமராஜ், சிறுபான்மை பிரிவு முகமது அனஸ்ராஜா, ஷேக் நாகூர்கனி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story