நாராயணசாமி மீது வழக்கு தொடருவோம் - சாமிநாதன் எம்.எல்.ஏ. பேட்டி


நாராயணசாமி மீது வழக்கு தொடருவோம் - சாமிநாதன் எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 27 Oct 2018 4:45 AM IST (Updated: 27 Oct 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் நரேந்திரமோடி மீது ஆதாரமின்றி முதல்–அமைச்சர் நாராயணசாமி ஊழல் குற்றச்சாட்டினை கூறினால் வழக்கு தொடருவோம் என பா.ஜனதா தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுவை மாநில பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

புதுவையில் உள்ள கூட்டுறவு நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் அரசு தவிக்கிறது. அரசு ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழு பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மீது ஊழல் குற்றச்சாட்டை முதல்–அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். பிரதமர் மீது குற்றச்சாட்டுகளை கூற காங்கிரஸ் மட்டுமின்றி யாருக்கும் தகுதியில்லை. மோடி மீது ஊழல் குற்றச்சாட்டினை தெரிவித்தற்கான ஆதாரம் நாராயணசாமியிடம் இருக்கிறதா? ஆதாரமின்றி குற்றச்சாட்டுக்களை கூறினால் அவர் மீது வழக்கு தொடருவோம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story