கிருஷ்ணகிரியில் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராமதாஸ், வள்ளியப்பன், மாவட்ட இணை செயலாளர்கள் தேன்மொழி, தனலட்சுமி, லட்சுமி மாநில செயற்குழு உறுப்பினர் மஞ்சுளா, தணிக்கையாளர் கிருஷ்ணவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் சங்க மாநில தணிக்கையாளர் தொடங்கி வைத்து பேசினார். இதில் மாவட்ட செயலாளர் தேவராஜ் மற்றும் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சந்திரன், பிரதாப் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை குறித்து விளக்கி பேசினர். மாநில பொதுச் செயலாளர் ஜெயராமன் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் பசப்பா நன்றி கூறினார். இதில் சத்துணவு ஊழியர்கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில், சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் அரசு வழங்கிட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு சட்ட ரீதியான குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். பணிக்கொடையாக சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்கிட வேண்டும். உணவு செலவு மானியம் ரூ.5 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Related Tags :
Next Story