சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை பெங்களூரு கோர்ட்டு உத்தரவு


சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை பெங்களூரு கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Oct 2018 3:45 AM IST (Updated: 27 Oct 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு, 

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சிறுமி பலாத்காரம்

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு 13 வயதில் மகள் உள்ளாள். இந்த சிறுமி கடந்த ஆண்டு (2017) மார்ச் மாதம் 23-ந்தேதி தனது வீட்டு முன்பு நின்று விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஏ.கே.காலனியை சேர்ந்த மகேந்திரா என்ற பூபதி, சிறுமியை அங்கிருந்து கடத்தி சென்றதாக தெரிகிறது. பின்னர் சிறுமியை ஒரு தனியார் தங்கும் விடுதியில் அடைத்து வைத்து மகேந்திரா பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து டி.ஜே.ஹள்ளி போலீஸ் நிலையத்தில் மகேந்திரா மீது சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் சென்னையில் பதுங்கி இருந்த மகேந்திராவை போலீசார் கைது செய்தார்கள். விசாரணையில், அவர் சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நீதிபதி லதா குமாரி தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியை கடத்தி சென்றதுடன், அவளை தனியார் தங்கும் விடுதியில் அடைத்து வைத்து மகேந்திரா பாலியல் பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Next Story