பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னட மொழி படிப்புக்கு சசிகலா விண்ணப்பித்தார்


பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னட மொழி படிப்புக்கு சசிகலா விண்ணப்பித்தார்
x
தினத்தந்தி 27 Oct 2018 4:30 AM IST (Updated: 27 Oct 2018 3:32 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னட மொழி படிப்புக்கு சசிகலா விண்ணப்பித்துள்ளார்.

பெங்களூரு, 

பெங்களூரு பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி மூலம் கன்னட மொழி படிப்புக்கு சசிகலா விண்ணப்பித்துள்ளார்.

கன்னடம் கற்க ஆர்வம்

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் சக கைதிகள் மற்றும் போலீஸ்காரர்களுடன் கன்னடத்தில் பேச சசிகலா சிரமப்பட்டார். இதனால் அவர் சிறையில் இருந்தபடியே கன்னடம் கற்க தொடங்கினார். அதே நேரத்தில் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலம் சான்றிதழுடன் கூடிய ஒரு ஆண்டுக்கான கன்னட மொழி படிப்பை படிக்கவும் சசிகலா ஆர்வம் காட்டுவதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து, கன்னட மொழி படிப்பை படிக்க சசிகலா ஆர்வம் காட்டுவதால் பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு நாளை(அதாவது இன்று) சென்று சசிகலா மற்றும் கல்வி கற்க ஆர்வமாக இருக்கும் பிற கைதிகளிடம் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து பெறப்படும் என்று பெங்களூரு பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி இயக்குனரும், பேராசிரியருமான மைலாரப்பா கூறி இருந்தார்.

சசிகலா விண்ணப்பித்தார்

ஆனால் நேற்று முன்தினமே பரப்பனஅக்ரஹாரா சிறைக்கு பெங்களூரு பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனர் மைலாரப்பா சென்றார். பின்னர் தொலைதூர கல்வியில் சேர்ந்து படிக்க விரும்பும் கைதிகளிடம் அவர் விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து வாங்கினார். அப்போது சசிகலாவும் ஒரு ஆண்டுக்கான சான்றிதழுடன் கூடிய கன்னட மொழி படிப்புக்கான விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போட்டுள்ளதாகவும், அவருக்கு பெண் பேராசிரியர் ஒருவர் கன்னடம் கற்று கொடுக்க உள்ளதாகவும் இயக்குனர் மைலாரப்பா தெரிவித்துள்ளார்.

சசிகலாவை போன்று இளவரசியும் கன்னட மொழி படிப்புக்கான விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போட்டுள்ளார். நேற்று முன்தினம் பரோலில் சிறையில் இருந்து வெளியே செல்லும் முன்பாக அவர், விண்ணப்ப படிவத்தில் கையெழுத்து போட்டு சேர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

Next Story