சைபர் கிரைம் வழக்குகளில் தண்டனை விகிதம் குறைந்தது உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்
சைபர் கிரைம் வழக்குகளில் தண்டனை விகிதம் பெருமளவு குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
மும்பை,
சைபர் கிரைம் வழக்குகளில் தண்டனை விகிதம் பெருமளவு குறைந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
தண்டனை விகிதம் குறைந்தது
கிரெடிட், டெபிட் கார்டு மோசடி, வங்கி மோசடி, திருமண இணையதளங்கள் மூலம் மோசடி என சைபர் கிரைம் குற்றச்சாட்டுகள் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் மிகவும் அதிகரித்துள்ளது.
சைபர் குற்றம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டு இருந்தாலும், மற்றொருபுறம் இதற்கான தண்டனை விகிதம் பெருமளவு குறைந்து வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவலில் கூறியிருப்பதாவது:-
2015-ம் ஆண்டில் மட்டும் 610 கிரெடிட், டெபிட் கார்டு மோசடி வழக்கு பதிவானது. இது கடந்த ஆண்டில் 1,522 வழக்குகளாக அதிகரித்துள்ளது. இதேபோல் 2015-ம் ஆண்டு 384 இணையதள வங்கி மோசடி வழக்கு பதிவானது. 2016-ம் ஆண்டில் 459 வழக்குகளும், கடந்த ஆண்டில் 773 வழக்குகளும் பதிவானது.
ஆனால் 2015-ம் ஆண்டு 40.47 சதவீதமாக இருந்த தண்டனை விகிதம். படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு 16.67 சதவீத்தை எட்டியுள்ளது.
விடுதலையாகினர்
இந்த ஆண்டில் ஜனவரி முதல் மே மாதம் வரை மட்டும் மொத்தமாக 1,665 சைபர் கிரைம் வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 569 கிரெடிட், டெபிட் மோசடியும், 334 இணையதள வங்கி மோசடியும், 48 முதலீட்டாளர்கள் மோசடியும் அடங்கும்.
இது தொடர்பாக 488 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் அனைவரும் விசாரணைக்கு பின் குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story