தூத்துக்குடியில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை


தூத்துக்குடியில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரிக்கை
x
தினத்தந்தி 28 Oct 2018 3:15 AM IST (Updated: 27 Oct 2018 11:27 PM IST)
t-max-icont-min-icon

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தூத்துக்குடியில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி, 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தூத்துக்குடியில் ஜாக்டோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி வி.வி.டி. சிக்னல் அருகே நேற்று மாலையில் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிவன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக தமிழ் ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் சுந்தர்சிங், மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் அந்தோணி எட்வர்ட் யூஜின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பு செயலாளர் சற்குணராஜ் கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகள்

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 6-வது, 7-வது ஊதியக்குழு முரண்பாடுகள் சரிசெய்யப்பட வேண்டும். 31.5.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். 7-வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய மாற்றத்தில் 21 மாத நிலுவை தொகையினை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பலர் கலந்து கொண்டனர்.

Next Story