தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்


தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 Oct 2018 3:15 AM IST (Updated: 27 Oct 2018 11:30 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் நேற்று 3-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் உதவியாளருக்கு ரூ.3 லட்சம் பணிக்கொடை வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 25-ந் தேதி முதல் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3-வது நாள்

இந்த போராட்டம் நேற்று 3-வது நாளாக நடந்தது. போராட்டத்துக்கு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பாக்கியசீலி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் துரைபாண்டி, மாவட்ட பொருளாளர் ஆண்டிசாமி, மாவட்ட இணை செயலாளர் மரியநேசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பொன்சேகர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story