மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி; நண்பர் படுகாயம் திருச்செந்தூர் அருகே பரிதாபம்


மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி; நண்பர் படுகாயம் திருச்செந்தூர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 28 Oct 2018 3:00 AM IST (Updated: 27 Oct 2018 11:33 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பலியானார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.

நண்பர்கள்

நெல்லை பாளையங்கோட்டை வருசபத்து பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் ராம்குமார் (வயது 23). பாளையங்கோட்டை திம்மராஜபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் கணேசன் (24). நண்பர்களான இவர்கள் 2 பேரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் ஒரு மோட்டார் சைக்கிளில் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்று விட்டு, இரவில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.

திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் நிலையம் அருகில் சென்றபோது, சாலையில் படுத்து கிடந்த மாட்டின் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.

வாலிபர் பலி

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த ராம்குமார், கணேசன் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியிலேயே ராம்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

பலத்த காயம் அடைந்த கணேசனுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story