மாவட்டத்தில் முதல் முறையாக காயல்பட்டினத்தில் பைபர் இணையதள சேவை தொடக்கம்


மாவட்டத்தில் முதல் முறையாக காயல்பட்டினத்தில் பைபர் இணையதள சேவை தொடக்கம்
x
தினத்தந்தி 28 Oct 2018 3:15 AM IST (Updated: 27 Oct 2018 11:36 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக காயல்பட்டினத்தில் பைபர் இணையதள சேவை தொடங்கப்பட்டது

ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக காயல்பட்டினத்தில் பைபர் இணையதள சேவை தொடங்கப்பட்டது

பைபர் இணையதள சேவை

தூத்துக்குடி மாவட்டத்தில் முதல் முறையாக காயல்பட்டினத்தில் பி.எஸ்.என்.எல். நிறுவனம், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுடன் இணைந்து பைபர் இணையதள சேவையை நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழா, காயல்பட்டினம் தனியார் மண்டபத்தில் நடந்தது.

தூத்துக்குடி பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் சஜிகுமார் தலைமை தாங்கி, பைபர் இணையதள சேவையை தொடங்கி வைத்து பேசினார்.அவர் பேசும்போது கூறியதாவது:-

அளவற்ற தொலைபேசி அழைப்புகள்

வளர்ந்த நாடுகளில் இணையதள சேவை கேபிள் டி.வி. வயர் மூலமே வழங்கப்படுகிறது. இதனால் இணையதள சேவை அதிவேகமாகவும், தடையற்றும் வழங்க முடிகிறது. இதில் மாத கட்டணம் ரூ.99 முதல் ரூ.16 ஆயிரத்து 999 வரையிலுமான பல்வேறு திட்டங்கள் உள்ளன. அனைத்து திட்டங்களிலும் அளவற்ற தொலைபேசி அழைப்புகள் பேசும் வசதி உள்ளது. ரூ.99 மாத கட்டணத்துக்கு தினமும் 1.5 ஜி.பி. 20 எம்.பி.பி.எஸ். வேகத்திலும், ரூ.777 கட்டணத்துக்கு மாதம் 500 ஜி.பி. 50 எம்.பி.பி.எஸ். வேகத்திலும் வழங்கப்படுகிறது.

11 மாத கட்டண முன்பணத்தை மொத்தமாக செலுத்தினால் 12-வது மாதம் இலவச சேவையாக வழங்கப்படுகிறது. அதேபோன்ற 21 மாத கட்டணத்தை முன்பணமாக செலுத்தினால், 24 மாதங்களுக்கும், 30 மாத கட்டணத்தை முன்பணமாக செலுத்தினால் 36 மாதங்களுக்கும் சேவை வழங்கப்படும். இந்த பைபர் இணையதள சேவை படிப்படியாக மாவட்டம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பி.எஸ்.என்.எல். உதவி பொது மேலாளர்கள் சேவியர், சிவசைலம், சேவியர் லூர்துசாமி, திருச்செந்தூர் கோட்ட பொறியாளர் பிரவீன்குமார், உதவி பொறியாளர் மணிகண்டன், இளநிலை பொறியாளர் பிரிட்டோ, கே.ஏ. பள்ளி கல்வி சங்க தலைவர் அப்துல் காதர், இளைஞர் ஐக்கிய முன்னணி செயலாளர் முகைதீன் அப்துல் காதர், டி.சி.டபிள்யு. நிறுவன மக்கள் தொடர்பு அலுவலர் பினோ மற்றும் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

Next Story