குழித்துறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
குழித்துறையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை,
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணெய் கடத்தப்படும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்துறை அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள்.
இந்தநிலையில், விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் புரந்தரதாஸ், வருவாய் ஆய்வாளர்கள் மைக்கேல் சுந்தர்ராஜ், ஜோதிஷ்குமார் மற்றும் அதிகாரிகள் நேற்று குழித்துறை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக கேரளாவை நோக்கி ஒரு மினி டெம்போ வேகமாக சென்றது. அந்த டெம்போவை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.
தொடர்ந்து மினி டெம்போவை சோதனை செய்த போது அதில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து வாகனத்துடன் அரிசியை பறிமுதல் செய்து விளவங்கோடு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். தப்பி ஓடிய டிரைவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story