நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை,
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று 3-வது நாளாக சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சத்துணவு ஊழியர்கள்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர், சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். 21 மாத நிலுவை தொகையை வழங்கவேண்டும். ஓய்வு பெறும் அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கடந்த 25-ந் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3-வது நாளாக
இந்த நிலையில் சத்துணவு ஊழியர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிச்சுமணி தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் கோவில்பிச்சை முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் தமிழரசன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இந்த போராட்டத்தில் ஏராளமான பெண் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டு தரையில் அமர்ந்து இருந்தனர். மதியம் உணவு அங்கே உணவு சமைத்து சாப்பிட்டனர்.
Related Tags :
Next Story