அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் அம்பையில் 31-ந் தேதி நடக்கிறது
அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், அம்பையில் வருகிற 31-ந் தேதி நடக்கிறது.
நெல்லை,
அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், அம்பையில் வருகிற 31-ந் தேதி நடக்கிறது.
இதுதொடர்பாக நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மின்னல்கொடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதிய உறுப்பினர் சேர்க்கை
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் இதர 16 அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. வாரியத்தில் பதிவு பெறாத கட்டுமானம், ஆட்டோ ஓட்டுனர், கைத்தறி, விசைத்தறி, தையல் உள்ளிட்ட அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களுக்காக வருகிற 31-ந் தேதி (புதன்கிழமை) அம்பை பூக்கடை பஜாரில் அமைந்துள்ள தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு பதிவு முகாம் நடக்கிறது. காலை 10 மணி முதல் முகாம் நடக்கிறது.
உரிய விண்ணப்பத்துடன் இரண்டு புகைப்படம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வயது தொடர்பாக பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி மாற்று சான்றிதழ் அல்லது ஓட்டுனர் உரிம நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல்களுடன் நேரில் வந்து உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு...
அசல் ஆவணங்கள் முகாமில் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின் நகல்கள் சரிபார்க்கப்பட்டு பெற்றுக் கொள்ளப்படும். மனுதாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருத்தல் வேண்டும். உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற இயலாது.
மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம், ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம், 2-வது தளம், பிளாக் எண் 39, வசந்தம் காலனி, திருமால் நகர், நெல்லை-7 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story