கரையாம்புத்தூரில் 3 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்


கரையாம்புத்தூரில் 3 குடிசை வீடுகள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 28 Oct 2018 3:45 AM IST (Updated: 28 Oct 2018 2:07 AM IST)
t-max-icont-min-icon

கரையாம்புத்தூரில் நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் எரிந்து நாசமாயின.

பாகூர்,

கரையாம்புத்தூர் பெரியபேட் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 50), விவசாய கூலி தொழிலாளி. நேற்று கணேசன் அவருடைய வீட்டில் உள்ளவர்களும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில் திடீரென அவருடைய வீட்டில் தீப்பிடித்துக்கொண்டது.

சிறிது நேரத்தில் தீ ‘‘மள மள’’வென அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் பரவியது. இதில் கணேசன் வீட்டுக்கு அருகில் இருந்த தனபாக்கியம் சார்லே ஆகியோரின் வீடுகளிலும் தீப்பிடித்துக்கொண்டது.

அதுகுறித்து பாகூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பாகூர் மற்றும் மடுகரையில் இருந்து தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 3 வீடுகளிலும் இருந்த மிக்சி, டி.வி., கட்டில், துணிகள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின. அவற்றின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுகுறித்து கரையாம்புத்தூர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.


Next Story