எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் வறட்சி பாதித்த மக்களுக்கு உதவுங்கள் அசோக் சவான் வேண்டுகோள்


எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் வறட்சி பாதித்த மக்களுக்கு உதவுங்கள் அசோக் சவான் வேண்டுகோள்
x
தினத்தந்தி 28 Oct 2018 5:00 AM IST (Updated: 28 Oct 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். வறட்சி பாதித்த மக்களுக்கு உதவுங்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மும்பை, 

என் பிறந்தநாளை கொண்டாட வேண்டாம். வறட்சி பாதித்த மக்களுக்கு உதவுங்கள் என மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம்

மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவானின் பிறந்தநாள் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கட்சி தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நாந்தெட் பகுதியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான “ஜன் சங்கரஸ் யாத்ரா” பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

எனது பிறந்தநாளை என்னுடன் இணைந்து கொண்டாட நீங்கள்(தொண்டர்கள்) ஆவலாக உள்ளது எனக்கு தெரியும். உங்கள் நகரங்கள், மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் நீங்கள் என் பிறந்தநாள் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருப்பது குறித்து அறிவேன்.

இருப்பினும் தற்போது மரத்வாடாவில் “ஜன் சங்கரஸ் யாத்ரா” பிரசார பயணத்தில் இருக்கிறேன். இங்குள்ள மக்களின் அவல நிலை என்னை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. நான் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தோள்கொடுக்க வேண்டும்.

எனவே பிறந்தநாள் கொண்டாட்டங்களில் நான் கலந்துகொள்ள போவதில்லை. என் பிறந்தநாளை தொண்டர்கள் கொண்டாட வேண்டாம்

உதவி செய்யுங்கள்...

பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசும், மத்திய அரசும் உதவ முன்வரும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே மாராட்டிய காங்கிரஸ் கமிட்டியின், வறட்சி நிவாரண பணிக்கு உங்களால் முடிந்த பண உதவிகளை செய்யுங்கள்.

மரத்வாடா பிரச்சினையை அரசு கையாளும் விதம் வெட்கக்கேடாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் “காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்துகொண்டு இருக்கிறது. பேச்சுவார்த்தை முடிந்ததும் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முழு விவரம் வெளியிடப்படும்” என்றார்.

Next Story