சிறுமி கற்பழிப்பு வழக்கு வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தானே கோர்ட்டு தீர்ப்பு


சிறுமி கற்பழிப்பு வழக்கு வாலிபருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தானே கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 28 Oct 2018 4:00 AM IST (Updated: 28 Oct 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

தானே, 

சிறுமியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருமணம் செய்துகொடுத்தனர்

தானேவை சேர்ந்தவர் சந்தீப் போயிர்(வயது 20). இவர் 16 வயது சிறுமி ஒருத்தியை காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சிறுமியை அவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு சந்தர்பங்களில் கற்பழித்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார்.

இதையறிந்த அவளின் தாத்தாவும், பாட்டியும் சந்தீப் போயிருக்கே சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொடுத்தனர்.

இதன் பின்னரே அந்த வாலிபர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது சிறுமிக்கு தெரியவந்தது. இதனால் சிறுமி அதிர்ச்சி அடைந்தார்.

தண்டனை

சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். இதன்பேரில், சந்தீப் போயிர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தானே கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இதில் வாலிபர் சிறுமியை ஏமாற்றி கற்பழித்தது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சந்தீப் போயிருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

Next Story