பராமரிப்பு பணி காரணமாக வேப்பந்தட்டை, மங்களமேடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்


பராமரிப்பு பணி காரணமாக வேப்பந்தட்டை, மங்களமேடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
x
தினத்தந்தி 29 Oct 2018 3:30 AM IST (Updated: 28 Oct 2018 11:37 PM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணி காரணமாக வேப்பந்தட்டை-மங்களமேடு பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

பெரம்பலூர், 
தமிழ்நாடு தொடர் மின்கழக பெரம்பலூர் கோட்ட உதவி செயற்பொறியாளர் முத்தமிழ் செல்வன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெரம்பலூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட எசனை துணை மின்நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், செஞ்சேரி, ஆலம்பாடி, எசனை, கீழக்கரை, பாப்பாங்கரை, ரெட்டைமலைசந்து, வேப்பந்தட்டை, பாலையூர், அனுக்கூர், சோமண்டாபுதூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் லப்பைகுடிக்காடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மங்களமேடு, கழனிவாசல் ஆகிய 2 துணை மின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் வாலிகண்டபுரம், தேவையூர், சின்னாறு, மங்களமேடு, எறையூர், பெருமத்தூர், குன்னம், பரவாய், வரகூர், பொன்னகரம், நன்னை, வேப்பூர், கிளியூர், எழுமுர், வைத்தியநாதபுரம், அயன் பேரையூர், வி.களத்தூர், டி.கிரனூர், திருமாந்துறை, லப்பைகுடிக்காடு, பெரிய வெண்மணி, சின்ன வெண்மணி, பெரியம்மாபாளையம், கல்லம்புதூர், சு.ஆடுதுறை, ஒகளுர், அந்தூர், பிம்பலூர், பசும்பலூர், பாண்டகபாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது.

இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.

Next Story