நபார்டு வங்கி மூலம் ரூ.7,098 கோடி கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கை கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்
தூத்துக்குடி மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டில் நபார்டு வங்கி மூலம் ரூ.7,098 கோடி கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 2019-20-ம் ஆண்டில் நபார்டு வங்கி மூலம் ரூ.7,098 கோடி கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்.
கடன் திட்ட அறிக்கை
நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, பாரத ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நபார்டு வங்கி தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சி மேலாளர் விஜயபாண்டியன் வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-
ரூ.7,098 கோடி
நபார்டு வங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து ஒவ்வொரு ஆண்டும் கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு வருகிறது. விவசாயத்தில் நீண்ட கால கடன், வேளாண்மையில் எந்திர மயமாக்கல், சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்குதல் போன்ற நோக்கத்துக்காக இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது. அதன்படி தூத்துக் குடி மாவட்டத்தில் 2019-2020-ம் ஆண்டு விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில் கடன், ஏற்றுமதி கல்வி மற்றும் வீட்டு வசதிக்கான கடன், அடிப்படை கட்டுமான வசதி, சுய உதவிக்குழுக்களுக்கு மொத்தம் ரூ.7 ஆயிரத்து 98 கோடியே 75 லட்சம் கடன் வழங்குவதற்கான திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் ரேவதி, பாரத ஸ்டேட் வங்கி முன்னோடி வங்கி மேலாளர் ரவி, வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story