மாணவர்களுக்கு இலவச நோட்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்


மாணவர்களுக்கு இலவச நோட்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Oct 2018 3:00 AM IST (Updated: 29 Oct 2018 1:09 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்களுக்கு இலவச நோட்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை, 

மாணவர்களுக்கு இலவச நோட்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நெல்லை மாவட்ட செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இலவச நோட்டுகள்

சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட குருவிகுளம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் வட்டார கல்வி அலுவலகங்களில் ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிக்கூடங்களுக்கு பள்ளி திறந்து ஒரு மாதம் ஆகியும் இலவச நோட்டுகள், புத்தகப்பைகள் வழங்கப்படவில்லை. மாணவர்களுக்கு நோட்டுகள், புத்தகப்பைகளை உடனடியாக வழங்க வேண்டும்.

அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியாளர் நிர்ணய ஆணையை வழங்க வேண்டும். அடுத்த மாதம் 27-ந் தேதி முதல் நடைபெறும் ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்த போராட்டத்தில் நமது சங்கத்தை சேர்ந்த ஆசிரியர்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். சத்துணவு ஊழியர்களின் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பது.

இவ்வாறு கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் அண்டோ குழந்தை ராஜேஷ், அமுதா, டேவிட் பொன்ராஜ், அருள்மரிய ஜான், அண்ணாதுரை, சுதர்சன், காமராஜ், பவுல், சந்திரசேகர், ராஜாமணி, முருகேசன், மீனாட்சி சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story