சித்த மருத்துவ கல்லூரியில் நிலவேம்பு கசாயம் வாங்க மக்கள் கூட்டம்


சித்த மருத்துவ கல்லூரியில் நிலவேம்பு கசாயம் வாங்க மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2018 3:00 AM IST (Updated: 29 Oct 2018 1:15 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் பாதிப்பையொட்டி நேற்று நெல்லை சித்தமருத்துவ கல்லூரியில் நிலவேம்பு கசாயம் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

நெல்லை, 

டெங்கு காய்ச்சல் பாதிப்பையொட்டி நேற்று நெல்லை சித்தமருத்துவ கல்லூரியில் நிலவேம்பு கசாயம் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.

டெங்கு காய்ச்சல்

நெல்லை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. தென்காசி பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதனால் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதேபோல் பன்றிக்காய்ச்சலாலும் சிலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் மற்றும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த டெங்கு காய்ச்சலுக்கு நிலவேம்பு கசாயமும், பப்பாளி இலை சாரும் மருந்தாக வழங்கப்படுகிறது. நிலவேம்பு கசாயம் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து டெங்கு காய்ச்சல் குணம் அடைகிறது.

இதனால் நெல்லை கலெக்டர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களிலும் இலவசமாக நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

மேலும் பல்வேறு அமைப்புகளின் சார்பிலும் நில வேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

மக்கள் கூட்டம்

பாளையங்கோட்டையில் உள்ள சித்தமருத்துவ கல்லூரியில் தினமும் காலையில் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் நில வேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலையில் இந்த கல்லூரி ஆஸ்பத்திரியில் நிலவேம்பு கசாயம் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

ஏராளமான பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று நிலவேம்பு கசாயத்தை வாங்கி சென்றனர்.

Next Story