நெல்லை அருகே கோஷ்டி மோதல் போலீஸ்காரர் உள்பட 9 பேர் மீது வழக்கு
நெல்லை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீஸ்காரர் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக போலீஸ்காரர் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில் கொடைவிழாவில் மோதல்
நெல்லை அருகே உள்ள தாழையூத்து பூலித்தேவன் நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் கொடை விழா நடந்தது. இதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
இது தொடர்பாக தாழையூத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி இருதரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அந்த பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ராஜவல்லிபுரம் முத்தாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர்செல்வம்(வயது28) என்பவர் தலைமையில் ஒரு கோஷ்டியும், சங்கரபாண்டியன் என்ற செல்லத்துரை தலைமையில் ஒரு கோஷ்டியும் மோதிக் கொண்டனர்.
இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், சங்கர்செல்வத்திற்கும், சங்கரபாண்டியனுக்கும் காயம் ஏற்பட்டது. இந்த 2பேரும் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போலீஸ்காரர் மீது வழக்கு
இது குறித்து சங்கர்செல்வமும், சங்கரபாண்டியனும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் இருதரப்பை சேர்ந்த செல்லத்துரை(42), பாலு என்ற சுடலைமுத்து(32), சிவா, முத்து, கணேசன், ஆறுமுகம், சசி, சங்கர்செல்வம், சங்கர் ஆகிய 9 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் பாலு என்ற சுடலைமுத்து, தீவிரவாத தடுப்பு கண்காணிப்பு சிறப்பு பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story