சந்தை புதுக்குப்பத்தில் வீடூர் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை கவர்னர் ஆய்வு


சந்தை புதுக்குப்பத்தில் வீடூர் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணியை கவர்னர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Oct 2018 4:00 AM IST (Updated: 29 Oct 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

சந்தை புதுக்குப்பத்தில் வீடூர் நீர்ப்பாசன வாய்க்காலை தூர்வாரும் பணியை கவர்னர் கிரண்பெடி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருக்கனூர்,

திருக்கனூர் அருகே உள்ள சந்தைபுதுக்குப்பத்தில் வீடூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் வாய்க்கால் உள்ளது. இந்த நீர்ப்பாசன வாய்க்காலை தூர்வாரும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை கவர்னர் கிரண்பெடி ஏற்கனவே ஒரு முறை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சில ஆலோசனைகளை கூறியிருந்தார்.

இந்த நிலையில் நேற்றுக் காலை கவர்னர் கிரண்பெடி சந்தைபுதுக்குப்பத்துக்கு வந்தார். இங்கு வீடூர் அணை நீர்ப்பாசன வாய்க்காலை தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசி, அவர்களை தன்னார்வலர்களிடம் அறிமுகப்படுத்தினார். இந்த தூர்வாரும் பணி நிறைவடைந்ததும் அதற்கான தொகையை தன்னார்வலர்கள் உங்களுக்கு வழங்குவார்கள் என்று அறிவுறுத்தினார்.

அதன் பின்னர் கவர்னர் கிரண்பெடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். கவர்னரின் இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


Next Story