மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி + "||" + Near Chengalpattu Motorcycle collide with the tree 2 killed

செங்கல்பட்டு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

செங்கல்பட்டு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
செங்கல்பட்டு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியானார்கள்.
செங்கல்பட்டு,

செங்கல்பட்டை அடுத்த கரும்பாக்கத்தை சேர்ந்தவர் சூர்யா (வயது 19). முள்ளிப்பாக்கம் புதுநகரை சேர்ந்தவர் பிரதாப்(19). இருவரும் நண்பர்கள். நேற்று அதிகாலை இருவரும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் செங்கல்பட்டு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.


செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கூட்ரோடு பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி சாலையோர பனைமரத்தில் மோதியது.

இதில் சூர்யாவும், பிரதாப்பும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி சாவு
சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில், வியாபாரி பரிதாபமாகச் செத்தார்.
2. மாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலி
செம்மஞ்சேரியில் எருமைமாடு மீது மோட்டார் சைக்கிள் மோதி டிரைவர் பலியானார்.
3. கோத்தகிரி அருகே மரத்தில் அமர்ந்து ஓய்வெடுத்த கரடி
கோத்தகிரி அருகே கரடி ஒன்று மரத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தது.
4. மரத்தில் கார் மோதி 3 வாலிபர்கள் பலி துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்
திருவரங்குளம் அருகே துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது மரத்தில் கார் மோதியதில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.