இத்தாலியை சேர்ந்த சோனியா காந்தி பல்லாரியில் போட்டியிட்டது ஏன்? ஈசுவரப்பா கேள்வி
சாந்தா வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், இத்தாலியை சேர்ந்த சோனியா காந்தி பல்லாரியில் போட்டியிட்டது ஏன்? என்று ஈசுவரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
பல்லாரி,
சாந்தா வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்று காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வரும் நிலையில், இத்தாலியை சேர்ந்த சோனியா காந்தி பல்லாரியில் போட்டியிட்டது ஏன்? என்று ஈசுவரப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
சாந்தா வேறு மாநிலத்தை...
கர்நாடகத்தில் காலியாக உள்ள பல்லாரி நாடாளுமன்ற தொகுதிக்கு வருகிற 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் பா.ஜனதா சார்பில் ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ.வின் சகோதரி சாந்தாவும், காங்கிரஸ் சார்பில் உக்ரப்பாவும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர். தனது சகோதரிக்கு ஆதரவாக ஸ்ரீராமுலுவும், உக்ரப்பாவுக்கு ஆதரவாக பல்லாரி மாவட்ட பொறுப்பு மந்திரி டி.கே.சிவக்குமாரும் போட்டி பிரசாரம் செய்து வருகிறார்கள். மேலும் ராமநகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்த டி.கே.சிவக்குமார் பல்லாரியில் வந்து அரசியல் செய்ய நினைப்பதாகவும், அவரது எண்ணம் பலிக்காது என்றும் ஸ்ரீராமுலு கூறி வருகிறார்.
அதே நேரத்தில் பா.ஜனதா வேட்பாளர் சாந்தா வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், அவர் பல்லாரி தொகுதியில் போட்டியிடுவது ஏன்? என்றும் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறி இருந்தனர். இதுகுறித்து பல்லாரி தொகுதியில் சாந்தாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முன்னாள் துணை முதல்-மந்திரி ஈசுவரப்பாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;-
சோனியா போட்டியிட்டது ஏன்?
சாந்தா பல்லாரியை சேர்ந்தவர் தான். அது பல்லாரி மக்களுக்கு நன்கு தெரியும். அவர் இந்த மண்ணின் மகள் ஆவார். அதனால் பல்லாரி தொகுதியில் சாந்தா போட்டியிடுகிறார். அவருக்கு பல்லாரி மக்கள் ஆதரவு அளிப்பார்கள். சோனியா காந்தி இத்தாலி நாட்டை சேர்ந்தவர். அவர் பல்லாரி தொகுதியில் போட்டியிட்டது ஏன்?. அவர் பசவண்ணரின் மகளா?. இந்திரா காந்தி சிக்கமகளூரு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். அதுபற்றி காங்கிரஸ் தலைவர்களுக்கு தெரியாதா?. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் என்ன பதில் சொல்வார்கள்.
முதல்-மந்திரி குமாரசாமி அடிக்கடி தான் நீண்ட நாட்கள் உயிர் வாழ போவதில்லை என்று கூறி வருகிறார். முதல்-மந்திரி பதவியில் இருப்பவர் இதுபோன்று பேசக்கூடாது. அவர் உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும். விவசாய கடனை தள்ளுபடி செய்திருப்பதாக பொய் பேசி வருகிறார். முதலில் விவசாய கடனை அவர் தள்ளுபடி செய்யட்டும். அப்படி செய்தால் இன்னும் 30 ஆண்டுகள் உடல் ஆரோக்கியத்துடன் உயிர் வாழ்வார்.
இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.
Related Tags :
Next Story