பிவண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
பிவண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த மர்மஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தானே,
பிவண்டி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்த மர்மஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏ.டி.எம். மையம்
பால்கர் மாவட்டம் வசாயில் இருந்து பிவண்டி செல்லும் நெடுஞ்சாலையில் அஞ்சுர்பாட்டா சிவாஜிநகர் பகுதியில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று முன்தினம் இரவு வாடிக்கையாளர் ஒருவர் பணம் எடுக்க வந்தார்.
அப்போது, ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளை போயிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக நார்போலி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பணம் கொள்ளை
இதில் மர்மஆசாமிகள் ஏ.டி.எம். எந்திரத்தை கேஸ் கட்டர் மூலம் உடைத்து அதில் இருந்த ரூ.9 லட்சத்து 90 ஆயிரத்து 700-ஐ கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்மஆசாமிகள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story