பள்ளி மாணவியை கொன்ற டிரைவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்


பள்ளி மாணவியை கொன்ற டிரைவர் மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 29 Oct 2018 4:08 AM IST (Updated: 29 Oct 2018 4:08 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டி தெற்கு காடு மலையடிவாரம் பகுதியை சேர்ந்தவர் சாமிவேல்.

ஆத்தூர்,

கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சின்னபொண்ணு. இவர்களது மகள் ராஜலட்சுமி (வயது 14). 8-ம் வகுப்பு மாணவியான ராஜலட்சுமி கடந்த 22-ந் தேதி வீட்டில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த நெல் அறுவடை எந்திர டிரைவர் தினேஷ்குமார் (26) என்பவர் திடீரென சாமிவேல் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த ராஜலட்சுமி தலையை துண்டித்து கொலை செய்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்தநிலையில் ராஜலட்சுமியின் பெற்றோர் சாமிவேல், சின்னபொண்ணு ஆகியோருக்கு ஆறுதல் கூறுவதற்காக சேலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி வளர்மதி, உடுமலைப்பேட்டையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா ஆகியோர் நேற்று மாணவி ராஜலட்சுமியின் வீட்டுக்கு வந்தனர்.

அங்கு சாமிவேல், சின்னபொண்ணுவை அவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் வளர்மதி, கவுசல்யா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

மாணவி ராஜலட்சுமி தாழ்த்தப்பட்ட பெண் என்பதால் சாதி அடிப்படையில் இந்த கொலை நடந்துள்ளது. கொலையில் ஈடுபட்ட தினேஷ்குமார் மீது இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இறந்த மாணவியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்த கொலைக்கு தினேஷ்குமாரின் மனைவி, தம்பி ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். எனவே அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வளர்மதி, கவுசல்யா கூறினர்.

Next Story