நடிகையின் மகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்த வாலிபர் கைது போலீசார் பொறி வைத்து பிடித்தனர்
இந்தி நடிகை மகளின் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வந்த வாலிபரை போலீசார் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்.
மும்பை,
இந்தி நடிகை மகளின் செல்போனுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வந்த வாலிபரை போலீசார் பொறி வைத்து பிடித்து கைது செய்தனர்.
ஆபாச குறுந்தகவல்
மும்பை ஜூகு பகுதியில் வசித்து வரும் இந்தி நடிகை ஒருவரிடம் கார் டிரைவராக கன்கையா ஜா (வயது28) என்பவர் வேலை பார்த்து வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் அவர் வேலையில் இருந்து நின்று விட்டார். அண்மையில் மீண்டும் அவர் நடிகையிடம் வந்து வேலை கேட்டார். ஆனால் நடிகை வேலை கொடுக்க மறுத்து விட்டார்.
இந்தநிலையில், நடிகையின் 21 வயது மகளின் செல்போன் எண் கன்கையா ஜாவுக்கு கிடைத்து உள்ளது. இதனால் அவர் நடிகையின் மகளுக்கு ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
வாலிபர் கைது
அதுமட்டுமல்லாமல் அடிக்கடி போன் செய்தும் பேசியுள்ளார். மேலும் கடந்த சில தினங்களாக அவரை பின் தொடர்ந்து சென்று தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன நடிகையின் மகள் இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் கன்கையா ஜா மீது ஜூகு போலீசில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து போலீசார் அவரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று நடிகையின் மகள் போல் பேசி, வேலை விஷயமாக பேசுவதற்கு ஜூகு பகுதிக்கு வரும்படி அழைத்தனர். இதை நம்பி அங்கு வந்த கன்கையா ஜாவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story