குடிபோதையில் போலீசார் முன் ஆடையை கழற்றி வீசிய மாடல் அழகியால் பரபரப்பு


குடிபோதையில் போலீசார் முன் ஆடையை கழற்றி வீசிய மாடல் அழகியால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Oct 2018 4:30 AM IST (Updated: 29 Oct 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

அந்தேரியில், குடிபோதையில் ரகளை செய்து போலீசார் முன் ஆடையை கழற்றி வீசிய மாடல் அழகியால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை, 

அந்தேரியில், குடிபோதையில் ரகளை செய்து போலீசார் முன் ஆடையை கழற்றி வீசிய மாடல் அழகியால் பரபரப்பு ஏற்பட்டது.

மாடல் அழகி

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்த மாடல் அழகி ஒருவர், அந்தேரி மேற்கு லோகண்ட்வாலா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் 15-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருக்கிறார். சம்பவத்தன்று இரவு அவர் மது குடித்து உள்ளார்.

போதை தலைக்கேறிய நிலையில் அவர் கட்டிட காவலாளி அலோக் என்பவரை போனில் தொடர்பு கொண்டு தனக்கு சிகரெட் வாங்கிக்கொண்டு வரும்படி மிரட்டினார்.

இதற்கு காவலாளி மறுத்து அவரிடம் தவறாக பேசியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த மாடல் அழகி குடிபோதையில் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து காவலாளியிடம் ரகளையில் ஈடுபட்டார்.

போலீசாரிடம் வாக்குவாதம்

அவரை பிடித்து தாக்கவும் செய்தார். பின்னர் திடீரென போலீஸ் அவசர எண்ணையும் தொடர்பு கொண்டு பேசி அங்கு வரும்படி அழைத்தார். இதையடுத்து ஓஷிவாரா போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரிடம் மாடல் அழகி தன்னை காவலாளி தாக்கி விட்டதாக புகார் கூறினார்.

இதையடுத்து போலீசார் அவரை போலீஸ் நிலையத்தில் வந்து புகார் கொடுக்க வரும்படி அழைத்தனர். ஆனால் பெண் போலீஸ் வந்தால் தான் போலீஸ் நிலையம் வருவேன் என்று கூறி போலீசாரிடம் மாடல் அழகி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆடையை கழற்றி வீசினார்

பின்னர் 15-வது மாடிக்கு செல்வதற்காக லிப்டில் ஏறினார். அப்போது, போலீசார் அவரை மேலே செல்லவிடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த மாடல் அழகி லிப்டுக்குள் நின்றபடி திடீரென தனது மேலாடை ஒன்றையும், கீழாடையையும் கழற்றி போலீசாரை நோக்கி வீசினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. பின்னர் ஒரு வழியாக போலீசார் மாடல் அழகியை சமாதானப்படுத்தினர்.

பின்னர் காலையில் மாடல் அழகி போலீஸ் நிலையம் வந்து புகார் கொடுத்தார். மாடல் அழகியின் புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Next Story