மது விற்ற 2 பேர் கைது


மது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Oct 2018 3:30 AM IST (Updated: 29 Oct 2018 4:59 AM IST)
t-max-icont-min-icon

மது விற்ற தங்கவேல் கைது செய்து 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், ராமையன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அஸ்தினாபுரம் மாரியம்மன் கோவில் பின்புறம் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த அஸ்தினாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியனை(வயது 39) போலீசார் கைது செய்தனர். இதேபோல, காட்டுபிரிங்கியம் பகுதியில் மதுபாட்டில்களை விற்ற அதே பகுதியை சேர்ந்த தங்கவேல்(64) கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 18 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story