தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஊட்டியில் மது ஒழிப்பு பேரணி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஊட்டியில் மது ஒழிப்பு பேரணி
x
தினத்தந்தி 29 Oct 2018 3:15 AM IST (Updated: 29 Oct 2018 5:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஊட்டியில் மது ஒழிப்பு பேரணி நடைபெற்றது.

ஊட்டி,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஊட்டியில் மது ஒழிப்பு குறித்த அமைதி பேரணி நேற்று நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட தலைவர் முகமது அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இஸ்மாயில், மாவட்ட துணை தலைவர் சர்புதீன், பொருளாளர் அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேரணியை மாநில செயலாளர் அப்பாஸ் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்றவர்கள் மது ஒழிப்புக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு நடந்து சென்றனர். பேரணியானது பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மெயின் பஜார் வழியாக ஏ.டி.சி. மணிக்கூண்டு பகுதியை வந்தடைந்தது.

பின்னர் அங்கு மது ஒழிப்பு குறித்து நிர்வாகிகள் பேசினர். இதையடுத்து சமுதாயத்தில் அதிகரித்து வரும் மதுப்பழக்கத்தை தடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெண்கள் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். பேரணி குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் கூறியதாவது:-

சமுதாயத்தில் மது பழக்கம் கூடாது. வட்டி, வரதட்சணை வாங்குதல் கூடாது. தீண்டாமை அகற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜனவரி மாதம் விழுப்புரத்தில் தவ்ஹீத் ஜமாத் மாநாடு நடைபெற உள்ளது.

இதனால் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக அமைதி பேரணி நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story