இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1172 பயிற்சிப் பணியிடங்கள்
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 1172 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் பல்வேறு கிளைகளிலும் பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மொத்தம் 1172 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
மண்டலம் மற்றும் கிளை வாரியான பணியிட விவரம் : கிழக்கு மண்டலம் - 441 பேர், பானிபட் சுத்தி கரிப்பு ஆலை - 233 பேர், குஜராத் சுத்திகரிப்பு ஆலை - 233 பேர், அசாம் ஆயில் டிவிஷன் - 135, பாரதிப் சுத்திகரிப்பு ஆலை 130 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பயிற்சிப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
கிழக்கு மண்டலம்...
கிழக்கு மண்டலத்தில் டெக்னீசியன் மற்றும் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 441 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டிரேடு அப்ரண்டிஸ் பணிக்கு 314 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். டெக்னீசியன் அப்ரண்டிஸ் பணிக்கு 127 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 31-10-2018-ந் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாகவும், 24 வயதுக்கு உட்பட்டவர் களாகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
என்ஜினீயரிங் பிரிவுகளில் டிப்ளமோ படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும், 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப்பணிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 1-11-2018-ந் தேதியாகும். இதற்கான எழுத்துத் தேர்வு 18-11-2018-ந் தேதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பானிபட்
பானிபட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் டிரேடு அப்ரண்டிஸ்/ அட்டன்ட் ஆபரேட்டர் பணிக்கு 233 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 24 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. பி.எஸ்சி. இயற்பியல், கணிதம், வேதியியல், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி போன்ற பட்டப்படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
குஜராத்
குஜராத் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் டெக்னீசியன் மற்றும் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி களுக்கு 233 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், பாய்லர் அட்டன்ட், அட்டன்ட் ஆபரேட்டர், டெக்னீசியன் (கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன்) போன்ற பிரிவில் ஆட்கள் சேர்க்கப்படுகிறார்கள். இவை தொடர்பான ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அசாம் ஆயில் டிவிஷன்
ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தின் அங்கமான அசாம் ஆயில் டிவிஷன் கிளையில் டெக்னீசியன் மற்றும் டிரேடு அப்ரண்டிஸ் பணிக்கு 135 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 3 ஆண்டு அறிவியல் பட்டப்படிப்புகள், கெமிக்கல், ரீபைனரி, பெட்ரோ கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் போன்ற டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
பாரதீப் சுத்திகரிப்பு ஆலை
ஐ.ஓ.சி.எல். நிறுவனத்தின் பாரதீப் சுத்திகரிப்பு ஆலையில் பயிற்சிப் பணிகளுக்கு 130 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதவியல், இண்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி போன்ற பட்டப்படிப்புகள், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 24 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
குஜராத், பானிபட், அசாம், பாரதீப் சுத்திகரிப்பு ஆலை பணிகளுக்கு 9-11-2018-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 18-11-2018 அன்று இதற்கான எழுத்துத் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவை பற்றிய விரிவான விவரத்தை https://www.iocl.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story