திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் ஆசிரியர் கல்வி படிக்கலாம்!
தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் இளநிலை ஆசிரியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
பல்வேறு காரணங்களுக்காக படிப்பை இடை நிறுத்தியவர்கள், கல்வியை மீண்டும் தொடர்ந்து தங்கள் லட்சியத்தை எட்டுவதற்காக திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் செயல்படுகின்றன. தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் ஏராளமானவர்களின் இடைநின்ற கல்விக் கனவை நிறைவேற்றி உள்ளது. தற்போது இந்த பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி முறையில் இளநிலை ஆசிரியர் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டு உள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் 11+1+3 அல்லது 10+2+3 என்ற கல்விதிட்ட முறையில் இளநிலை பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தொடக்க கல்வி ஆசிரியராகப் பணியாற்றி இருக்க வேண்டும். என்.சி.டி.இ. சான்றிதழ் பெற்றிருப்பதும் அவசியம்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்ப படிவத்தை பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை குறிப்பிட்ட முகவரிகளில் நேரடியாகவும் கொடுக்கலாம். தபால் மூலமும் அனுப்பலாம். நவம்பர் 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
1000 பேர் இந்த படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சி வழங்கப்படுகிறது. இரு பிரிவிலும் தலா 500 பேர் சேர்க்கப்படுகிறார்கள். இது 2 ஆண்டு கால படிப்பாகும். கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் இதில் சேர்க்கப்படுகிறார்கள்.
தமிழகம் முழுவதும் 10 மையங்களில் இவர் களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேர் பயிற்சியில் சேரலாம். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கணித அறிவியல், வணிகவியல், பொருளாதாரவியல் பாடத்துறைகளுக்கு பி.எட் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 50 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்.
விரிவான விவரங்களை www.tnou.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
Related Tags :
Next Story