நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கும் தெப்பக்குளம் தூர்வார அதிகாரிகளுக்கு, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உத்தரவு


நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கும் தெப்பக்குளம் தூர்வார அதிகாரிகளுக்கு, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உத்தரவு
x
தினத்தந்தி 30 Oct 2018 4:30 AM IST (Updated: 30 Oct 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கும் தெப்பக்குளத்தை தூர்வார அதிகாரிகளுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உத்தரவிட்டார்.

மலைக்கோட்டை, 
திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் நேற்று மருத்துவ முகாம் நடந்தது. முகாமை தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் துப்புரவு பணிகளையும் வார்டு பகுதியில் நடந்து சென்று ஆய்வு செய்தார். அவருடன் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர்.

அப்போது அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த ஒரு வாரமாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் மாநகராட்சி அலுவலர்களை கொண்டு தூய்மைப்பணி நடந்து வருகிறது. ஆய்வின்போது, மழைக்காலத்தையொட்டி எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. 8, 9, 10 மற்றும் 12-வது வார்டுகளில் துப்புரவு பணிகள் நிறைவு பெற்று விட்டது.

நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் உள்ள தெப்பக்குளம் தண்ணீர் இன்றி கிடந்தது. அது மழைநீர் சேகரிக்கக்கூடிய கட்டமைப்பு கொண்டதாகும். எனவே, அந்த தெப்பக்குளத்தை தூர்வாரி சுத்தம் செய்ய மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவ முகாம் மூலம் 350 பேர் பயன் அடைந்துள்ளனர்.

இன்னும் 2 நாட்கள் கிழக்கு தொகுதி முழுவதும் தூய்மைப்பணி மற்றும் மருத்துவ முகாம் நடத்தப்படும். 16, 17, 20, 21 ஆகிய வார்டுகளிலும் பணிகள் மேற்கொள்ளப்படும். திருச்சி கிழக்கு தொகுதி சிறப்பான நிலையினை எட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதல்-அமைச்சர் மீதான புகாரை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது பற்றி அமைச்சர் வெல்லமண்டி நடராஜனிடம் நிருபர்கள் கேட்டபோது, சிரித்து கொண்டே, பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Next Story