வெண்குன்றம் மலை கோவிலுக்கு ரூ.64 லட்சம் செலவில் பாதை அமைக்கும் பணி - அமைச்சர் தொடங்கி வைத்தார்


வெண்குன்றம் மலை கோவிலுக்கு ரூ.64 லட்சம் செலவில் பாதை அமைக்கும் பணி - அமைச்சர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 Oct 2018 4:36 AM IST (Updated: 30 Oct 2018 4:36 AM IST)
t-max-icont-min-icon

வெண்குன்றம் மலை கோவிலுக்கு, ரூ.64 லட்சம் செலவில் பாதை அமைக்கும் பணியினை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

வந்தவாசி

வந்தவாசி அருகே 4 கிலோ மீட்டர் தூரத்தில் வெண்குன்றம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உள்ள வெண்குன்றம் மலை மீது பர்வதவர்த்தினி உடனுறை தவளகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல பாறைகளும், சிறிய கற்களுமே படிகட்டுகளாகவும், கரடுமுரடான பாதைகள் வழியாகவும் இருந்து வருகிறது.

கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத் திருவிழா, பவுர்ணமி பூஜை, பிரதோஷ வழிபாடு உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பூஜைகளுக்கு வந்தவாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து செல்லும் பக்தர்கள் இந்த கரடுமுரடான பாதையில் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் இப்போதுள்ள பாதைக்கு சற்றுதூரத்தில் கற்படிகட்டுகள் மூலம் புதிய பாதை அமைக்க முதல்கட்டமாக இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் ரூ.64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வெண்குன்றம் மலை அடிவாரத்தில் புதிய பாதை அமைய உள்ள இடத்தில் கற்படிகட்டுகளை வைத்து பாதை அமைக்கும் பணியை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.அம்பேத்குமார், அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தூசி.கே.மோகன், முன்னாள் எம்.பி. மு.துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் ஜெ.பாலு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி.கே.பி.மணி, வெண்குன்றம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் முனுசாமி, அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழரசி, செயல் அலுவலர் நந்தகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஆன்மிக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story