தூத்துக்குடியில் தேவர் ஜெயந்தி விழா: உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, அவருடைய உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையொட்டி, அவருடைய உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேவர் ஜெயந்திதூத்துக்குடி மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் உள்ள முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி தூத்துக்குடி 3–வது மைலில் உள்ள முத்துராமலிங்கதேவர் உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தேவர் காலனியில் உள்ள முத்துராமலிங்கதேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆவின் சேர்மனுமான என்.சின்னத்துரை, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டாக் ராஜா, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ராஜகோபால், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருத்தாய் விண்ணரசி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சாலமோன்ஜெயசீலன், மேற்கு பகுதி செயலாளர் முருகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெபசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று தூத்துக்குடி தொகுதி எம்.பி. ஜெயசிங் தியாகராஜ நட்டர்ஜி 3–வது மைலில் உள்ள முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தி.மு.க.தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி 3–வது மைல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட பிரதிநிதி இசக்கிராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
காங்கிரஸ்தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் 3–வது மைல் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் டேவிட் பிரபாகரன், கணேஷ், பொருளாளர் அந்தோணிமுத்து, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
த.மா.காதூத்துக்குடி தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 3–வது மைலில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சிவனணைந்த பெருமாள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், மாநகர துணைத்தலைவர் செல்லையா, இளைஞர் அணி வட்டார தலைவர் சார்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.ம.மு.க.தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்3–வது மைல் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் ஹென்றிதாமஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ், துணை செயலாளர் பாலன், பகுதி செயலாளர்கள் ஆறுமுகம், அசோக், தொழிற்சங்க துணைத்தலைவர் சண்முககுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கட்சிதூத்துக்குடி மத்திய மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் 3–வது மைலில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் வில்சன் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் குரூஸ்திவாகர் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் ஜெயகோபால், துணை செயலாளர் பிரபாகர், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் செல்வா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கழகம்தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, 3–வது மைலில் உள்ள முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் ரவிசேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், பொருளாளர் அருண்சுரேஷ்குமார், துணை செயலாளர் அருள்ராஜ், மாநகர செயலாளர் காசிலிங்கம், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் அந்தோணிபிச்சை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜனதாதூத்துக்குடி மாவட்ட பா.ஜனதா கட்சி சார்பில் 3–வது மைலில் உள்ள முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் சந்தணகுமார், உள்ளாட்சி பிரிவு மாவட்ட தலைவர் பிரபு, மாவட்ட பொதுச்செயலாளர் சிவராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் 3–வது மைலில் உள்ள முத்துராமலிங்க தேவர் உருவச்சிலைக்கு மண்டல தலைவர் இசக்கிதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.