எஸ்.எஸ்.எல்.சி. மாணவ–மாணவிகளுக்கு தினத்தந்தி வழங்கும் கல்வி நிதி நெல்லை கலெக்டர் ஷில்பா நாளை வழங்குகிறார்
‘தினத்தந்தி‘ வழங்கும் கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 20 மாணவ–மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழா, நாளை (வியாழக்கிழமை) நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது.
நெல்லை,
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ‘தினத்தந்தி‘ வழங்கும் கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள 20 மாணவ–மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் விழா, நாளை (வியாழக்கிழமை) நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. விழாவில் நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கலந்து கொண்டு, கல்வி நிதியை வழங்குகிறார்.
மாணவர் பரிசு திட்டம்
கல்விப்பணியில் பல புரட்சிகளை செய்து மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் ‘தினத்தந்தி‘, சார்பில் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கவேண்டும் என்பதற்காக எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்–2 பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ–மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டு வந்தது.
கல்வி நிதி ரூ.34 லட்சம்
2014–2015–ம் கல்வி ஆண்டில் இருந்து, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள் மேல்படிப்பினை தொடர்வதற்கு வசதியாக ‘தினத்தந்தி‘ கல்வி நிதி திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் மாவட்டத்துக்கு 10 மாணவர்கள் வீதம் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் 34 மாவட்டங்களை சேர்ந்த 340 மாணவ–மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.34 லட்சம் பரிசு வழங்கப்படுகிறது.
ரொக்கப்பரிசு ரூ.10 ஆயிரம்
அதன்படி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2017–2018–ம் கல்வி ஆண்டில் ‘தினத்தந்தி‘ கல்வி நிதி பெற தகுதி பெற்றுள்ள எஸ்.எஸ்.எல்.சி. மாணவ–மாணவிகள் 20 பேர்களின் பெயர் விவரம் வருமாறு:–
நெல்லை மாவட்டம்
1.க.கவுசல்யா, மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, நெல்லை டவுன் கல்லணை. 2.மா. விஜயலட்சுமி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, புளியங்குடி. 3.த.சங்கீதா, ஸ்டெல்லா மாரீஸ் மகளிர் உயர்நிலைப்பள்ளி, திசையன்விளை, 4.சு.தமிழரசி, அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளங்குளி. 5.சு.சாந்தினி, செய்யது உறைவிடப்பள்ளி, குற்றாலம்.
6.ம.அபிஸர லட்சுமி, அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளி, விக்கிரமசிங்கபுரம். 7.கா.கயல்விழி, இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி, அரியநாயகிபுரம், கடையநல்லூர். 8.ஐ.எரின், பாலகிருஷ்ணா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, வடக்கன்குளம். 9.செ.ஹலிமா ரஸ்பியா, கே.ஏ.எம்.பி. மீரானியா மேல்நிலைப்பள்ளி, களக்காடு. 10.சா.நித்திஸ்குமார், நாலந்தா பள்ளி, வள்ளியூர்.
தூத்துக்குடி மாவட்டம்
11.ப.சூரியநாராயணன், ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீவைகுண்டம். 12.மு.தனவித்யா, புனித தோமையார் மேல்நிலைப்பள்ளி, வீரபாண்டியன்பட்டினம். 13.சு.சோகிஸ்யா சோஜல், தூய யோவான் மகளிர் மேல்நிலைப்பள்ளி, நாசரேத், 14.பெ.மகாலட்சுமி, தூயமேரி மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாயர்புரம். 15.ம.பிரியதர்ஷினி, டி.என்.டி.டி.ஏ. ஆர்.எம்.பி. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி, சாத்தான்குளம். 16.மா.ராஜேசுவரி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஏரல். 17.சே.பிரின்ஸ், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, பொத்தக்காலன்விளை. 18.கா.பிரமசக்தி, திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி. 19.ல.சுகந்தி, செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர். 20.ஆ.ஜோதி, செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செந்தூர்.
கலெக்டர் வழங்குகிறார்
இந்த மாணவ–மாணவிகளுக்கு ‘தினத்தந்தி‘ கல்வி நிதி வழங்கும் விழா, நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. விழாவுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, மாணவ–மாணவிகளுக்கு கல்வி நிதிக்கான வரைவோலைகளை வழங்கி பேசுகிறார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா முன்னிலை வகிக்கிறார். நெல்லை தினத்தந்தி மேலாளர் த.ஜனார்த்தனன் வரவேற்று பேசுகிறார். நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை நாச்சியார் என்ற ஆனந்தபைரவி நன்றி கூறுகிறார்.
Related Tags :
Next Story