திருவள்ளூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 263 மனுக்கள்


திருவள்ளூரில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 263 மனுக்கள்
x
தினத்தந்தி 31 Oct 2018 4:30 AM IST (Updated: 30 Oct 2018 11:05 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் வேலைவாய்ப்பு, கடனுதவி, கல்விக் கடன், சாலை வசதி, போக்குவரத்து வசதி, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 263 மனுக்களை அளித்தனர்.

அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அவர் சிறுசேமிப்பு சார்பாக உலக சிக்கன நாள் விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற கட்டுரைப்போட்டி, பேச்சுபோட்டி, நடனம் மற்றும் நாடகம் ஆகிய போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாத்திமா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி மற்றும் அனைத்து துறையை சேர்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தார்கள்.

Next Story