காசிமேட்டில் துப்பாக்கி முனையில் 4 ரவுடிகள் கைது
காசிமேட்டில் ரவுடிகள் 4 பேர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர்,
சென்னை காசிமேடு காசிபுரம் ‘ஏ’ பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் தேசப்பன் (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது காசிமேடு, ராயபுரம் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, வழிப்பறி தொடர்பாக ஏராளமான வழக்குகள் உள்ளன. மேலும், தேசப்பன் 13 முறை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கொலை வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த தேசப்பன் ஜாமீனில் வெளிவந்தார். அதன் பின்னர் அவர் தலைமறைவானார். போலீசார் தனிப்படை அமைத்து அவரை வலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் காசிமேடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தேசப்பன் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாகவும், அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி வருவதாகவும் வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் கண்ணன் தலைமையில் காசிமேடு இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் உள்ளிட்ட தனிப்படை போலீசார் தேசப்பன் பதுங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.
அதன் பின்னர் அதிரடியாக அந்த வீட்டுக்குள் நுழைந்த போலீசார், தேசப்பன் மற்றும் அவனது கூட்டாளிகளும், பிரபல ரவுடிகளுமான கவுதம் (28) வேலுமணி (30) சக்திவேல் (32) ஆகிய 4 பேரையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Tags :
Next Story