ரூ.9.30 லட்சத்தில் சாலை அமைக்க பூமிபூஜை - அசோக்குமார் எம்.பி. பங்கேற்பு


ரூ.9.30 லட்சத்தில் சாலை அமைக்க பூமிபூஜை - அசோக்குமார் எம்.பி. பங்கேற்பு
x
தினத்தந்தி 31 Oct 2018 5:00 AM IST (Updated: 31 Oct 2018 2:44 AM IST)
t-max-icont-min-icon

ரூ.9.30 லட்சத்தில் சாலை அமைக்க நடந்த பூமிபூஜையில் அசோக்குமார் எம்.பி. பங்கேற்றார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் கட்டிகானப்பள்ளி ஊராட்சி ராஜாஜி நகர் 7-வது கிராஸ் பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9.30 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடந்தது. இதில் அசோக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ., மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ், ஊராட்சி செயலாளர் கோவிந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன், அன்பரசு, பழனிசாமி, மற்றும் ராஜாஜி நகர் பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story