5 வருடங்களாக சம்பளம் வழங்காததால் கூட்டுறவு சங்க ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


5 வருடங்களாக சம்பளம் வழங்காததால் கூட்டுறவு சங்க ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 30 Oct 2018 11:00 PM GMT (Updated: 30 Oct 2018 10:48 PM GMT)

5 வருடங்களாக சம்பளம் வழங்காததால், கூட்டுறவு சங்க ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேவகோட்டை,

காரைக்குடி சூடாமணிபுரத்தை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 47). இவர் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் பணிபுரிந்து வந்தார். தற்போது தமிழகம் முழுவதும் வீட்டு வசதி வாரியம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதாகவும், இதனால் சங்கத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் வெங்கடேஸ்வரனுக்கு கடந்த 5 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படாததால், அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்தாராம். இதையடுத்து அவர் கண்ணங்கோட்டை கண்மாய் கரையில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த தாலுகா போலீசார் வெங்கடேஸ்வரன் உடலை கைப்பற்றி தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து இறந்தவரின் மனைவி ராஜேஸ்வரி கொடுத்த புகாரில், தனது கணவர் சம்பளம் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல சுப்ரமணியபுரம் வடக்கு வீதியை சேர்ந்த கண்ணையா என்பவரின் மகன் கார்த்திக் (வயது 33). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டு வந்தாராம். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கார்த்திக் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது புகாரின் பேரில் போலீசார் கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் இதுகுறித்து மேல் விசாரணை நடந்து வருகிறது.


Next Story