மத்திய பஸ் நிலையம் அருகே கேண்டீனில் மது பாட்டில்கள் கேட்டு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மறியல்
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே கேண்டீனில் மது பாட்டில்கள் கேட்டு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி,
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான கேண்டீன் உள்ளது. இந்த கேண்டீன் மூலம் திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், மரணம் அடைந்த வீரர்களின் மனைவிகள் ஆகியோருக்கு மளிகை பொருட்கள்,வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் மது பாட்டில்கள் சலுகை விலையில் வினியோகிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் ‘ரேங்க்’ அடிப்படையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கு 4 மது பாட்டில்கள் வழங்கப்படும். மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு 2 பாட்டில்கள் வழங்கப்படும்.
இவற்றை கேண்டீனில் வாங்க வசதியாக மளிகை பொருட்களுக்கு தனியாக ஒரு அட்டையும், மது பாட்டில்கள் வாங்குவதற்கென்று தனியாக ஒரு அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 15-ந் தேதி வரை 2 மது பாட்டில்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், மீதம் 2 பாட்டில்கள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. எனவே மது பாட்டில்கள் வாங்குவதற்காக கேண்டீனுக்கு தினமும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் பெண்கள் வந்து சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் இருந்து மது பாட்டில்கள் நேற்று கேண்டீனுக்கு வருவதாக அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து மது பாட்டில்கள் வாங்குவதற்காக ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், அவர்களின் மனைவியர் என 300-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை 7 மணி முதலே கேண்டீன் முன்பு திரண்டு முற்றுகையிட்டவாறு நின்றனர்.
இந்த நிலையில் திடீரென அறிவிப்பு பலகை எடுக்கப்பட்டு, சென்னையில் இருந்து மது பாட்டில் வரவில்லை என்றும், எனவே, மது பாட்டில்கள் வழங்க முடியாது என்றும் ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், தங்களுக்கு மது பாட்டில்கள் வழங்கப்பட்டே ஆக வேண்டும் என்று கூறி கேண்டீனை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் சிகாமணி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் கேண்டீன் மேலாளர் லால்கணேசனும் கேண்டீனுக்கு வந்தார். அவரை முற்றுகையிட்ட ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், ‘மது பாட்டில் கிடைக்கும்வரை இங்கிருந்து செல்லமாட்டோம்’ என்றனர். மேலும் மளிகை பொருட்களும் முறையாக வழங்கப்படவில்லை என்று குற்றம் சாட்டினர். அதைத்தொடர்ந்து கேண்டீன் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கேண்டீன் மேலாளர் கூறுகையில், ‘சென்னையில் இருந்து வரவேண்டிய மது பாட்டில்கள் வரவில்லை. அப்படியே இனி வந்தாலும் மது பாட்டில்களை நாளை(வியாழக்கிழமை) அதாவது நவம்பர் மாதம் 1-ந்தேதி முதல் தான் வழங்க முடியும்’ என்றார். இது அவர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்த மாதத்திற்கான கணக்கை எப்படி அடுத்த மாதத்தில் காட்டமுடியும் என்று கூறி கேண்டீன் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர். மேலும் கேண்டீன் தலைமை அலுவலகத்திற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்பதால், மீண்டும் கேண்டீன் முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீஸ் தரப்பில், “பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்துவதை அனுமதிக்க முடியாது. இல்லையென்றால் கைது நடவடிக்கை எடுக்கப்படும். உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும்” என்றனர். போலீசார் கூறியதை ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் கேட்காமல் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்த வேளையில் போலீசார் ஒருவரை குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் எச்சரித்ததால் அனைவரும் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் கேண்டீன் மேலாளர் அலுவலகத்தில் சிலரை அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். திருச்சியில் மது பாட்டில்கள் கேட்டு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story