அமேசானின் நியூ கிண்டில் பேப்பர்வொயிட்
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், பலப்பல புதிய மின்னணு தயாரிப்புகளை தனது பிராண்ட் பெயரில் அறிமுகம் செய்வதுண்டு. அந்த வகையில் மேம்பட்ட இ-புத்தகமான கிண்டில் பிராண்டில் ஒரு புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.
நியூ கிண்டில் பேப்பர்வொயிட் என்ற பெயரில் வந்துள்ள இந்த இ-புத்தகம் பல்வேறு புதிய சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
முதல் முறையாக இந்த மின்னணு புத்தகம் வாட்டர் புரூப் தன்மை கொண்டதாக வந்துள்ளது. இதை நான்கு மணி நேரம் தண்ணீரில் போட்டு இதன் தண்ணீர் புகா தன்மையை சோதித்துள்ளனர். இதனால் திடீரென படும் மழைத் துளி அல்லது நீர் வீழ்ச்சி அருகே செல்லும்போது அடிக்கும் சாரல் போன்றவை இதை பாதிப்ப தில்லை.
இது 6 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதன் நினைவகம் 8 ஜி.பி. முதல் 32 ஜி.பி. வரை நீள்கிறது. இதன் எடை 182 கிராம் மட்டுமே. மிகவும் மெல்லிதானது (8.18 மி.மீ). கண் கூசாத அதேசமயம் மிகவும் பிரகாசமாக இது இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதில் படிப்பது எளிது. இதற்காக இதில் உள்ள எல்.இ.டி. விளக்குகளின் எண்ணிக்கையை 5 ஆக அதிகரித்துள்ளது அமேசான். இதனால் இரவிலும் மற்றொரு விளக்கின் துணையின்றி படிக்க முடிவது சிறப்பம்சம். அனைத்திற்கும் மேலாக குரல் வழி அதாவது ஆடியோ புத்தகங்களையும் கேட்கும் வசதி இதில் உள்ளது. இதனால் படிப்பது சிரமமாக இருக்கும்போது காதில் கேட்கலாம். புளூடூத் இணைப்பு வசதியும் உள்ளது. இதனால் புத்தகங்களை ஸ்டீரியோ பின்னணியிலும் கேட்க முடியும்.
இப்போது முன்பதிவு செய்யலாம். ஆனால் நவம்பர் 7-ம் தேதியிலிருந்துதான் இது டெலிவரி செய்யப்படும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை ரூ. 12,999 மற்றும் ரூ. 17,999.
Related Tags :
Next Story