மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 1 Nov 2018 4:00 AM IST (Updated: 31 Oct 2018 5:14 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருவதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருவதாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட நந்தகோபாலபுரம், போல்பேட்டை பகுதிகளில் மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, ஒவ்வொரு வீடுகளிலும் கொசு உற்பத்தி இடங்களை கண்டறியும் வகையில், தூத்துக்குடி மாநகராட்சியின் மூலம், ஒட்டப்பட்டுள்ள வருடாந்திர காலண்டரில், அந்த வீட்டில் கொசு உற்பத்தி உள்ளதா என்பதை ஆய்வு செய்து, கொசு ஒழிப்பு பணியாளர்கள் வருடாந்திர காலண்டரில் ஆம், இல்லை என்று குறிப்பிட வேண்டும்.

மேலும், கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும் பணியாளர்கள் கை உறைகளுடன் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடுகளை தொடர்ந்து கண்காணிப்பதோடு, கொசு ஒழிப்பு பணிகளை அந்த பகுதியில் தீவிரப்படுத்திட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

மெகா தூய்மை பணி

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:–

மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, மெகா தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காய்ச்சல் கண்டறியும் பகுதியில், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டு உள்ளது. மாவட்டத்தில், கொசு ஒழிப்பு பணியில் 1,400 பேர் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் மூலம் பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புகை அடிக்கும் எந்திரம் மூலம் அனைத்து வீடுகளிலும் புகை அடிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் மெகா தூய்மை பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story