தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோரிக்கை
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கடந்த மே மாதம் 22–ந் தேதி நடந்த கலவரத்தில் சேதம் அடைந்த அரசு ஊழியர்களின் வாகனங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும், அரசு ஊழியர் சங்கத்தில் உள்ள துறைவாரியான நிர்வாகிகள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடும் உயர் அதிகாரிகளை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதற்காக அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது போலீசார் கலெக்டர் அலுவலகம் நுழைவுவாயில் அருகே செல்ல துடியாதபடி வெளியில் உள்ள கேட்டை பூட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டம்
அதே நேரத்தில் ஏற்கனவே கலெக்டர் அலுவலகத்தின் உள்ளே இருந்த ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வெளியில் நிறுத்தப்பட்டு இருந்த ஊழியர்கள் கேட்டுக்கு வெளியில் நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரே நேரத்தில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் செந்தூர்ராஜன் ஆகியோர் பேசினர். சிறப்பு அழைப்பாளர்களாக அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், மாநில செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் பார்த்தீபன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் திரளான அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story